Thursday, December 15, 2011

racer

 

"தோற்றவர்களும் என்னை பாராட்டினர்!'

தமிழகத்தில் பைக் ரேசில் பங்கேற்ற முதல் பெண் சித்ரா ப்ரியா:  சின்ன வயதிலேயே ஸ்கூட்டியில் வேகமாக போவேன். அண்ணன்கள் என் வேகத்தைப் பார்த்து, அறிவுரை கூறுவர். அதன் பின், நான் காட்டிய நிதானம், அவர்களுக்கு தைரியம் கொடுத்திருக்க வேண்டும். என் பெற்றோரும் என்னை புரிந்து கொண்டு எனக்கு பைக் வாங்கிக் கொடுத்தனர். 

             பெங்களூரில் நடந்த டிராக் ரேசில் பங்கேற்றேன். அதில் முதலிடத்தில் வந்தேன். முதல் போட்டியிலேயே ஜெயித்ததில் ஒரு நம்பிக்கை வந்தது. கடந்த 2005ல், ஸ்ரீபெரும்புதூரில் நடந்த ஒரு போட்டியில் பங்கேற்றேன். அதில் நான் மட்டும் தான் பெண். அந்தப் போட்டியில் பங்கேற்றவர்கள் என்னை ஏளனமாகப் பார்த்தனர். ஆனால், அதில் நான் தான் ஜெயித்தேன். தோற்றவர்கள் கூட என்னை பாராட்டினர். 

             இந்திய அளவில் சிறந்த பைக் ரேசர்களுக்கான, "டாப் 6' அட்டணையில் எனக்கு இடம் கிடைத்துள்ளது. இதில் இடம் பெறுவது சாதாரண விஷயமல்ல; இதற்கான தேர்வில் முதலில் எட்டு போடணும். அதாவது, மிகக் குறுகலான பெட்டியில், எட்டு போட்டு காட்டணும்; பின், மரக்கட்டைகளில் பைக் ஓட்டணும். கடைசியாக, இந்தியாவில் பைக் ரேஸ் பிரியர்கள் ஓட்டு போட்டுத் தேர்ந்தெடுப்பர். 

               இந்த ஆண்டு, 20 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். அதில் தேர்வான ஆறு பேரில், தென்னிந்தியாவிலிருந்து தேர்வானது நான் மட்டும் தான்; அதில் ஒரே பெண்ணும் நான் தான். பைக் ரேசில் பங்கேற்கும் பெண்கள் கடுமையாக பயிற்சி செய்ய வேண்டும். அப்போது தான் ஆண்களுக்கு நிகராக ரேசில் பயணிக்க முடியும். "நம்மால் முடியும்' என்று நினைக்க வேண்டும். குறைந்தபட்சம் இரண்டு பைக் வைத்திருக்க வேண்டும். ஆண்டிற்கு ஆறு லட்சம் ரூபாய் வரை செலவாகும். ஸ்பான்சர் ஷிப் கிடைத்தால் தான் சமாளிக்க முடியும். வட இந்தியாவை ஒப்பிடும் போது, தென்னிந்தியாவில் எங்களுக்கு ஸ்பான்சர் கிடைப்பது சிரமம் தான்!

நன்றி : dinamalar

No comments:

Post a Comment

Infolinks

ShareThis