Friday, November 12, 2010

மாதம் ரூ 1,000

DIRECTORATE OF GOVERNMENT EXAMINATIONS, CHENNAI – 600 006.



2010 +2 தேர்வில் 80% மதிப்பெண் எடுத்து இந்த ஆண்டு 2010- ல் பட்ட படிப்பு ( BA /B.Sc/ B.E/ B.Tech/ B.Com/ BBA/ B.Pharm/ B.Arch etc...) சேர்ந்த மாணவர்களுக்கு மாதம் ரூ 1,000 மத்திய அரசால் வழங்ப்படுகின்றது   ( முதுகலை ( Master Degree) படிக்கும் போது மாதம் ரூ. 2,000 வழங்கப்படும்).   2009 மற்றும் அதற்க்கு முன்னர் தேர்சி பெற்றவர்களுக்கு இந்த உதவி தொகை கிடைக்காது.  இது 2010- ல் 80 % மதிப்பெண் எடுத்தவர்களுக்கு மட்டுமே. இந்த உதவி தொகை. தமிழகத்தில் மொத்தம்  4883 மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ. 4,50,000- க்கு குறைவாக இருக்க வேண்டும்.
 
மாணவர்கள் இந்த இணையதளத்திற்க்கு http://www.tn.gov.in/dge/scholarship/login.php   சென்று தங்களுடைய + 2 தேர்வு பதிவு எண்ணை ( Registration Number) சமர்பிக்கவேண்டும் தங்களுடைய மதிப்பெண்ணை சரிபார்த்து 80% சதவீதத்திற்க்கு மேல் இருந்தால் விண்ணப்ப படிவத்தை டவுன்லோட் செய்யலாம். நவம்பர் 12- ஆம் தேதி வரைதான் விண்ணப்பத்தை டவுன்லோடு செய்ய முடியும்   . பூர்த்தி செய்து அனுப்ப கடைசி தேதி நவம்பர் 16.
 
உடன் சமர்பிக்க வேண்டிய சான்றிதழ்கள்

1.
சாதி சான்றிதழ்
2.
வருமான சான்றிதழ்
3. +2
மதிப்பெண் சான்றிதழ்
 
பூர்தி செய்யப்ப்பட்ட விண்ணப்பத்தை   அனுப்ப வேண்டிய முகவரி
 
இணை இயக்குனர் ( மேல் நிலை)
அரசு தேர்வுகள் இயக்ககம்
DPI.
வளாகம் , கல்லூரி சாலை
சென்னை - 600006
 
மேலும் விபரம் இந்த இணையதளத்தில் http://www.tn.gov.in/dge   உள்ளது.

1 comment:

Infolinks

ShareThis