2010


















2010ன் காமெடியன் விருது!

இந்த வருடத்தின் சிறந்த காமெடி நடிகர், காமெடி வசனகர்த்தா, பஞ்ச் டயலாக் புலி, எல்லா விருதுகளும் மானமிகு (மாண்புமிகு வரும் போகும் என்று வீரமணி சொல்லியிருக்கிறார்!) கலைஞர் கருணாநிதி அவர்களுக்கே வழங்கப்படுகின்றன. “நான் எப்போதும் கம்யூனிஸ்ட்தான்”, “நான் ஏழையாகப் பிறந்து ஏழைகளோடு வளர்ந்து, ஏழைகளுக்காக வாழ்பவன்”, “ராசா தலித் என்பதால் ஊழல் குற்றம் சுமத்துகிறார்கள்”, “அவமரியாதைகளைத் தாங்கிக் கொள்ளும் சுயமரியாதைக்காரன்”, “இரு பெண்கள் ( நீரா ராடியா, பூங்கோதை) பேசிக் கொள்கிறார்கள். அதைப் பற்றி உங்களுக்கென்ன?” “ ராசாவுக்கு டெலிகாம் வேண்டுமென்று யாரும் யாரிடமும் கேட்கவில்லை” போன்ற எண்ணற்ற மறக்க முடியாத நகைச்சுவை வசனங்களை 2010ல் உதிர்த்திருக்கும் கருணாநிதி, 2011ல் நவரச நாயகனாகப் பரிணமிக்கும் வாய்ப்பு பலமாக இருக்கிறது என்பதை நேயர்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன்.

அப்பன் குதிருக்குள் இல்லை…?
* தங்கள் நிறுவனத்தில் மிகச் சாதாரண நிலையிலிருந்த சரவணன் என்பவர் அண்ணா சாலையில் இருக்கும் 200 கோடி மதிப்புள்ள சொத்துக்கு ‘பவர்’ பெற்று வேறு ஒரு மலேஷிய டாக்டரிடம் விற்றிருக்கிறார். “அதற்கும் எனக்கும் எந்தத் தொடர்புமில்லை என்று ராசாத்தி அம்மாள் விடுத்த அறிக்கை மூலம் சாதாரண பாமரனுக்குக்கூட ‘பளிச்சென்று’ விஷயங்கள் விளங்குகிறதே” என்று முணுமுணுக்கிறார்கள் தி.மு.க. பிரமுகர்கள். “குழம்பி இருக்கும் குடும்பம் ஜால்ரா ஆலோசகர்களைத் தவிர்த்து நல்ல ஆலோசகர்களை நாடுவது நல்லது” என்கிறார் தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர்.


2010ன் பிரபலமான வார்த்தைகள்…?
! நான் லஞ்ச ஊழலின் பரம எதிரி என்று கருணாநிதி பத்திரிகையாளர்களிடம் கூறியதும்; லஞ்ச ஊழலை ஒழிப்போம் என்று காங்கிரஸ் மாநாட்டில் சோனியா சூளுரைத்து, திட்டம் வகுத்ததும்தாம்!


 மன்மோகன் சிங்குக்குப் பக்கபலமாக சோனியா இருப்பதுபோல, ஆ.ராசாவுக்குப் பக்கபலமாக கருணாநிதி இருக்கிறார். நாட்டு மக்களுக்குப் பக்கபலமாக யார் இருக்கிறார்கள்?
! வோட்டுரிமை இருக்கிறது. ஆனால் அதை சக்தி வாய்ந்த முறையில் பயன்படுத்தத்தான் நமக்குத் தெரியவில்லை.





 





–நன்றி கல்கி, விகடன்

Comments

  1. "இன்னிக்கு நிறைய ஊழல் போலிருக்கு" மிக அற்புதம்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நம்புங்கள், இது அரசு ஆரம்பப் பள்ளி!

ஏர் எழுபது

Bird Photography