அழகான தீவு தைவான்

கிழக்காசியாவில் உள்ள ஒரு தீவாகும். "தாய்வான்" என்பது சீனக் குடியரசு நிர்வகிக்கும் பகுதிகளையும் பொதுவாகக் குறிப்பிடுவது வழக்கமாகும். 


தீவுக் கூட்டங்களான தாய்வான் மற்றும் பெங்கு (Penghu) (தாய்பெய், காவோசியுங் மாநகராட்சிகள் தவிர்த்து) ஆகியன சீனக் குடியரசின் தாய்வான் மாகாணம் என உத்தியோகபூர்வமாக அழைக்கப்படுகிறது

தாய்வான் தீவு, கிழக்காசியாவில் சீனாவின் தென்கிழக்கே,ஜப்பானின் முக்கிய தீஇவுகளுக்கு தென்மேற்கே,பிலிப்பீன்சுக்கு வட-வடமேற்குத் திசையில் அமைந்துள்ளது. தாய்வான் போர்மோசா (Formosa) எனவும் அழைக்கப்படுறது. போர்மோசா என்பதுபோர்த்துகீச மொழியில் "அழகான (தீவு)" எனப் பொருள்படும்.

 இது பசிபிக் கடலின் கிழக்கே, தென் சீனக் கடல் மற்றும் லூசோன் நீரிணை ஆகியவற்றுக்குத் தெற்கே, தாய்வான் நீரிணைக்கு மேற்கே, கிழக்கு சீனக் கடலுக்கு வடக்கேஎயும் அமைந்துள்ளது
இத்தீவு 394 கிமீநீளமும் 144 கிமீ அகலமும் கொண்டது
தாய்வானில் முப்பதாயிரம் ஆண்டுகளுக்கும் முன்னர் மனித இனம் தோன்றியதற்கு ஆதாரங்கள் காணப்படுகின்றன.ஆனாலும் தாய்வானின் தற்போதய ஆதிகுடிகளின்முன்னோர் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு குடியேறியதாக அறியப்படுகிறது.
இவர்கள் மலே, மற்றும்போலினேசியர்களுடன்தொடர்புடையவர்களெனக் கண்டறியப்பட்டுள்ளது. 1544இல் போர்த்துக்கேயர் இங்கு வந்தனர். ஆயினும் இவர்களுக்கு இங்கு குடியேறும் நோக்கமிருக்கவில்லை. 1624இல் டச்சுக்காரர் வந்திறங்கினர். 
இவர்கள் பியூஜியன்] மற்றும் பெங்கு போன்ற இடங்களிலிருந்து கூலிகளைக் குடியேற்றி தாய்வானை வர்த்தக மையமாக்கினர்.


Comments

Popular posts from this blog

நம்புங்கள், இது அரசு ஆரம்பப் பள்ளி!

ஏர் எழுபது

Bird Photography