Sunday, June 20, 2010

காங்கிரசில் யார் யாரெல்லாம் உடந்தை

யூனியன் கார்பைட் (Union Carbide Corporation)  செய்த கொலைபாதகத்தில் இருந்து தப்புவதற்கு, காங்கிரசில் யார் யாரெல்லாம் உடந்தையாக இருந்தார்கள் என்பதைப் பட்டியல் இடுவதை விட, யார் யார் உடந்தையாகவும் ஒத்து ஊதவும் இல்லை என்பதைப் பட்டியல் இடுவது எளிது என்று சொல்கிற 
இந்தியன் எக்ஸ்ப்ரெஸ் நாளிதழின் கட்டுரையைப் படிக்க click here

ன நாயக சோஷலிசம் பேசிக் கொண்டு ஜன நாயகக் காவலர்களாகத் தங்களைக் காட்டிக் கொள்ளும் காங்கிரஸ் கட்சியுமே கூட, அப்படி ஒரு வெட்கம் கெட்ட நிலையைக் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக அரங்கேற்றி வருவது அம்பலமான பிறகும் கூட, அழுகிய புண்ணுக்குப் புனுகு பூசுவதைப் போலத் தான் இன்னமும் நடந்து கொள்கிறதே ஏன்?

ராஜீவ் காந்திஆண்டர்சன் விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருந்தாரா, முடிவெடுப்பதில் தவறு செய்தாரா இல்லையா என்பது உண்மையான பிரச்சினையே அல்ல! ஏதோ ஒரு சூழ்நிலையில், ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருந்தால் கூட, தவறில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு இருந்தால், மக்களுடைய பிரச்சினையில் அதற்கு அப்புறமாவது அக்கறை எடுத்துக் கொண்டு செயல் பட்டிருந்தால், மன்னித்து ஏற்றுக் கொண்டிருக்கலாம்.  

னால், செத்துப் போன நரசிம்ம ராவ் மீது பழியைத் திருப்புகிறார்கள். அர்ஜுன் சிங் தான் தவறு செய்தார் என்று மறைமுகமாகத் தங்கள் கை என்னவோ கரை படியாதது போலக் காட்டிக் கொள்ள முயற்சிக்கிறார்கள். இத்தனைக்கும் பிறகு கூட பாதிக்கப் பட்ட சொந்த ஜனங்களுக்கு நீதி கிடைப்பதில், நிவாரணம் வழங்குவதில் உண்மையான அக்கறை காட்ட மாட்டேன் என்கிறார்கள்.

மெரிக்காவின்  கையை முறுக்குகிற தந்திரத்தில் செய்து கொள்ளப் பட்ட அணு ஒப்பந்தம், அதைத் தொடர்ந்து அமெரிக்க கார்பரேட்டுகளுக்கு மட்டுமே சாதகமான அணு உலை விபத்துக்கான நஷ்ட ஈடு வரையறை செய்யும் சட்ட முன்வரைவை  நிறைவேற்றிக் கொள்வதற்காக மட்டுமே, நாளை திங்கள் கிழமை அமைச்சரவைக் குழு, போனால் போகிறதென்று போபால் மக்களுக்கு நிவாரணத் தொகையை இன்னும் கொஞ்சம் கூட்டி கொடுப்பதான முடிவை அறிவிப்பார்கள்.

காங்கிரசிடம் தொடர்ந்து ஏமாறுகிற ஏமாளிகளாகவே இருந்து விடப் போகிறோமா?

காங்கிரஸ் தான் என்னவோ இந்த தேச மக்களுக்கு  ஏதோ பெட்டிக் கடையில் மிட்டாய் வாங்கிக் கொடுக்கிற மாதிரி சுதந்திரத்தையும் வாங்கிக் கொடுத்ததாகக் கதைத்துக் கொண்டே,இந்த தேசத்தின் இறையாண்மையையும், இந்த மக்களின் எதிர்காலத்தையும் கொள்ளை லாபம் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட கார்பரேட் பிணம் தின்னிக் கழுகுகளிடம், மண்டியிட்டு கைமாற்றிவிடப் போகிற அவலத்தையும் சகித்துக் கொள்ளப் போகிறோமா?  

போபால் தந்த பாடத்தில் இருந்து எதையும் கற்றுக் கொள்ளத் தெரியாத காங்கிரஸ் மாதிரியே, நாமும் இருந்து விடப் போகிறோமா?

ன்ன செய்யப் போகிறோம்?

No comments:

Post a Comment

Infolinks

ShareThis