நான் சூழ்நிலை கைதி மனம் திறந்த ரஜினி! . இதுவரை சேனல்களுக்கோ, பத்திரிகைகளுக்கோ இப்படி ஒரு பேட்டியளித்தது இல்லை ரஜினி. டைரக்டர்கள் யூனியன் சார்பாக நடந்த விழாவில் திடீரென்று பாலசந்தர் இந்த கான்சப்டை சொல்ல, தட்டவே முடியாமல் ஒப்புக் கொண்டாராம் ரஜினி. தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் 40-வது ஆண்டு விழா நேற்று (24th-Oct) சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வந்திருந்த சில நடிகர், நடிகைகள் மேடைக்கு வந்து தங்களைக் கவர்ந்த இயக்குநர்கள் யார், யார்..? தங்களுடைய வளர்ச்சியில் இயக்குநர்களுக்கு இருந்த பங்கு என்ன என்பதைப் பற்றி விலாவாரியாகப் பகிர்ந்து கொண்டார்கள். இந்த விழாவுக்கே முத்தாய்ப்பு வைப்பது போல ஒரு நிகழ்ச்சி இறுதியில் நடைபெற்ற ரஜினி-கே.பாலசந்தர் இருவர் மட்டும் கலந்து கொண்ட நேருக்கு நேர் பேட்டிதான். சுமார் இருபது நிமிடங்கள் நீடித்த இந்த நேருக்கு நேர் பேட்டியில் கே.பி.யின் அசத்தலான கேள்விகளும், ரஜினியின் பட், பட்டென்ற நறுக்குத் தெரித்தாற்போன்ற பதில்களும் கைதட்டல்களை அள்ளிக் கொண்டு போனது. ...