பால் தாக்கரே எனக்கு கடவுள் மாதிரி-ரஜினிகாந்த்
செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 5, 2010, 17:13[IST]
தனது எந்திரன் படத்தை பாலிவுட்டினருக்குப் போட்டுக் காட்டுவதற்காக மும்பை வந்திருந்தார் ரஜினிகாந்த். இதில் ஷாருக் கான் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் கலந்து கொள்ளவில்லை. அதேசமயம், அமிதாப் பச்சன் உள்ளிட்ட பழைய சூப்பர் ஸ்டார் நடிகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் இன்று சிவசேனா தலைவர் பால் தாக்கரே வீட்டுக்குச் சென்றார் ரஜினிகாந்த். அவரிடம் ஆசியும் பெற்றார்.
தாக்கரேவை சந்தித்த பின்னர் வெளியில் வந்த ரஜினி கூறுகையில், எனக்கு பால் தாக்கரே கடவுள் மாதிரி.
எனது பெற்றோர் மராத்தியர்கள். மராத்தி மொழிப் படங்களில் நடிக்க ஆசையாக உள்ளது என்றார் ரஜினி.
சமீப காலமாக இந்தி சூப்பர் ஸ்டார் நடிகர்களுக்கு எதிராக சிவசேனாவும், ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிர நவ நிர்மான் சேனாவும் மாறி மாறி போர்க்கொடி உயர்த்தி பெரும் போராட்டங்களை நடத்தி வருகின்றன. அமிதாப் பச்சன், ஷாருக் கான், சல்மான் கான் என யாரையும் இவர்கள் விடவில்லை. இந்தநிலையில் எந்திரனின் இந்திப் பதிப்பு மும்பையில் ரிலீஸாகியுள்ளது. இந்தப் பின்னணியில் ரஜினி, பால்தாக்கரேவை சந்தித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Thanks to Thats tamil.
No comments:
Post a Comment