Friday, October 22, 2010

தனியார் பள்ளிகளின் கட்டண விவரங்கள்

தனியார் பள்ளிகளின் கட்டண விவரங்கள்: இணையதளத்தில் வெளியீடு

Download the complete list as pdf from here. Fee Structure for Private Schools









 சென்னை : பெற்றோர்கள் பல மாதங்களாக வலியுறுத்தி வந்த தனியார் பள்ளிகளுக்கான கட்டண விவரங்கள், தமிழக அரசு இணையதளத்தில் நேற்று மாலை திடீரென வெளியிடப்பட்டன.
கோவிந்தராஜன் குழு நிர்ணயித்த கட்டண விவரங்களை வெளியிடக் கோரி, சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பெற்றோர்கள் தினமும் நடத்திவரும் போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், 10 ஆயிரம் பள்ளிகளுக்கும் வகுப்பு வாரியாக நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆண்டு கட்டண விவரங்கள், அரசு இணையதளத்தில் www.tn.gov.in வெளியிடப்பட்டுள்ளன. கோவிந்தராஜன் குழு, மாநிலம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளிடம் இருந்து வரவு - செலவு விவரங்களை பெற்று, அதனடிப்படையில் வகுப்பு வாரியாக கட்டணங்களை நிர்ணயித்து, கடந்த மே மாதம் முதல் வாரத்தில் வெளியிட்டது. குழு நிர்ணயித்த கட்டணங்களை பெற்றோர் வரவேற்ற நிலையில், நிர்ணயித்த கட்டணம் மிகவும் குறைவு என்று பள்ளி நிர்வாகிகள் அதிருப்தி அடைந்தனர். இதன் காரணமாக 6,500 பள்ளிகள், கட்டணத்தை உயர்த்தி அறிவிக்கக் கோரி, கோவிந்தராஜன் குழுவிடம் மேல் முறையீடு செய்தன. இந்த பள்ளிகளுக்கு, அடுத்த ஆண்டு புதிய கட்டணம் அறிவிக்கப்படும் என்றும், அதுவரை ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கட்டணம் அமலில் இருக்கும் என்றும், கோவிந்தராஜன் குழு அறிவித்தது.

இந்த விவகாரம் ஐகோர்ட் வரை சென்றது. இதில், "நான்கு மாதங்களுக்குள், மேல் முறையீடு செய்த பள்ளிகளுக்கு புதிய கட்டணம் அறிவிக்க குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மற்ற பள்ளிகள் குழு நிர்ணயம் செய்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது' என்றும் ஐகோர்ட் உத்தரவிட்டது. இதற்கிடையே, கோவிந்தராஜன் குழு நிர்ணயித்த கட்டண விவரங்களை, பள்ளி நிர்வாகங்கள் வெளியிடக் கோரி, சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வந்தனர். கோவிந்தராஜன் குழுவும், கட்டண விவரங்களை இணையதளத்தில் வெளியிடாமல் இருந்து வந்தது. இதனால், பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம் நாளுக்கு நாள் வலுவடைந்து வந்தது, அரசுக்கு பெரும் தலைவலியாக இருந்தது. குறைந்தபட்சம், கட்டண விவரங்களை இணையதளத்தில் வெளியிட்டாலாவது, பெற்றோர்களின் ஆவேசம் குறையும் என, பல தரப்பிலும் இருந்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதன் காரணமாக, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு, வகுப்புகள் வாரியாக, கோவிந்தராஜன் குழு நிர்ணயித்த கட்டண விவரங்கள், தமிழக அரசு இணையதளத்தில் நேற்று மாலை திடீரென வெளியிடப்பட்டன.

மொத்தம் 955 பக்கங்களில், 10 ஆயிரத்து 955 பள்ளிகளுக்கான விவரங்கள் அதில் இடம்பெற்றுள்ளன. புதுக்கோட்டை, கரூர், திருச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் உள்ள 500 பள்ளிகள், மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பதில்லை என குழுவிடம் தெரிவித்ததன் அடிப்படையில், அந்தப் பள்ளிகளுக்கு மட்டும் கட்டண விவரங்கள் இடம்பெறவில்லை. மற்ற அனைத்துப் பள்ளிகளுக்கும், மாவட்ட வாரியாக, பள்ளிகள் வாரியாக, எல்.கே.ஜி., முதல் பிளஸ் 2 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆண்டுக் கட்டணம் வெளியிடப்பட்டுள்ளது. இணையதளத்தில் மாவட்ட வாரி பட்டியல்? பட்டியலில் எந்தவொரு பள்ளியையும் தேடும்போது, மாவட்டவாரியான வரிசையில் பள்ளிகளை பட்டியலிட்டு, அதைத் தேடிக் காணும் வசதியை ஏற்படுத்தினால், ஒரே பெயரில் பல பள்ளிகளைக் கண்டு, குழப்பம் அடையும் நிலை தவிர்க்கப்படும்.

புத்தகமாக வெளியிட கோரிக்கை: பட்டியல் குறித்து பெற்றோர் கருத்து தெரிவித்தபோது, "இணையதளத்தில், 32 மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் விவரம், வரிசையாக தரப்பட்டுள்ளன. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் என்பதால், பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. குறிப்பிட்ட பள்ளிக்கு நிர்ணயித்துள்ள கட்டணத்தை பார்க்க வேண்டுமெனில், நீண்ட நேரமாகிறது. பட்டியல் ஒரு பக்கம் இருந்தாலும், பள்ளியின் பெயர், மாவட்டம் போன்றவற்றை பதிவு செய்தால், அதற்குரிய கட்டண விவரங்கள் உடனடியாக தெரிய வரும் வகையில், ஏற்பாடு செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இந்த பட்டியலை அப்படியே புத்தகமாக வெளியிட்டு, 20 ரூபாய், 30 ரூபாய்க்கு விற்பனை செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்' என கூறினர்.

6 comments:

  1. பெற்றோர்கள் போராட்டத்தால் மாணவர்கள் கல்வி பாதிப்பாம்! இன்றைய ஆங்கில நாளேடு “இந்து” வின் இரணடாம் பக்க செய்தி! யாரைப் பாதுகாக்க நினைக்கிறார் ராம்! இனியும் பிள்ளைகள் ஆங்கில கற்க இந்து வாங்கலாம் என்று நினைக்கும் பெற்றோர்கள் மாறவேண்டும்!!

    ReplyDelete
  2. i could not down load the file ma.. please help me out....

    ReplyDelete
  3. i could not download the form ma. pl help me out. i get "Server not found"

    ReplyDelete
  4. மாவட்ட வாரியாக பிரித்துவிட்டார்கள்..
    (Download link updated)

    http://www.tn.gov.in/departments/sedu/feestructure/default.html

    ReplyDelete

Infolinks

ShareThis