Donating old or unused items
உங்க கிட்ட பழைய ஆடைகள், பொம்மைகள் இருக்கா?
உங்க கிட்ட நீங்க உபயோகப்படுத்தாத பொருட்கள் ஆடைகள், பொம்மைகள் இருக்கா? அதை தூக்கி எறியவும் மனசு இல்லாமல் என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கிங்களா? அதை எங்களிடம் குடுங்க நாங்க அதை ஏழை எளியவர்களுக்கு குடுக்குறோம்.CTC - Chennai Trekking Club என்று ஒரு இயக்கம் இருக்கிறது.. நீங்க மேற் சொன்ன விஷயங்களை எங்களிடம் அளிக்க விரும்பினால் இந்த சுட்டியில் உள்ள Excel Form ஜ நிரப்பினால் எங்க தன்னார்வலர் ஒருவர் உங்களை தொடர்பு கொண்டு உங்களை சந்தித்து அதை பெற்றுக்கொள்வார். இப்போதைக்கு இது சென்னையில் உள்ளவர்களுக்கு மட்டுமே.. உங்களால் நீங்க அளிக்க இருக்கும் பொருட்களை சென்னைக்கு அனுப்ப முடிந்தால் நீங்க கூட எங்களை தொடர்பு கொள்ளலாம்.
இது ஆதரவற்ற முதியோர்களுக்கும், குழந்தைகளுக்கும் குடுக்க போறாங்க..எனவே தயவு செய்து திரும்ப உபயோகப்படுத்தும் நிலையில் இருந்தால் மட்டும் குடுங்க.. கிழிந்த துணிகளை எல்லாம் குடுக்காதிங்க பிளீஸ்..
இது ஒரு நல்ல விஷயம் நாலு பேருக்கு தெரிந்தால் கூட நாலு ஜந்து பேருக்கு உதவி செய்யலாம். இந்த விஷயத்தை உங்களால் முடிந்தால் நாலு பேருக்கு பகிருங்க.
மேலும் விவரங்களுக்கு இங்க சுட்டுங்க
Comments
Post a Comment