ஒரு ஜோடி செருப்பு

செனகா என்று ஒருவர். பித்தாகரசின்(Pythagoras) சீடர். செருப்புத் தைக்கும் தொழிலாளியிடம் ஒரு ஜோடி செருப்புகளை வாங்கிக் கொண்டு, அடுத்த வாரம், பணம் தருவதாகச் சொல்லியிருந்தார்.

ஒரு வாரம் கழித்துப் போனபோது, அந்தத் தொழிலாளி, இறந்து போயிருந்தார். தன் அதிர்ஷ்டத்தை மெச்சிக் கொண்டே அமைதியாகத் திரும்பி விட்டார் செனகா.
ஒரு வாரம் நந்தையாய் நகர்ந்தது. ஒவ்வொரு நாளும் குற்றவுணர்வில், குறுகிக் கொண்டிருந்தார் செனகா. பொறுக்க முடியாமல், அந்த செருப்புக் கடைக்குப் போய், ஆவேசமாகப் பணத்தை வீசினார்.

"தொலைந்து போ! ஊருக்கெல்லாம் செத்துப் போன நீ, எனக்கு மட்டும் ஒரு வாரமாய் உயிரோடிருந்தாய்...' என்று அலறிவிட்டு வந்தாராம்.

Comments

  1. நல்ல கதை. மிக நன்றாக இருந்தது.

    ReplyDelete
  2. அழகான கதைங்க ..!!

    ReplyDelete
  3. Nice..

    one suggestion:
    if u remove word verification, it will b easy for us to post a comment.

    ReplyDelete
  4. கரெக்ட்டு, அதனாலதான் இப்ப பள்ளிக்கூடத்துல கூட பித்தாகரஸ் தியரத்தை தாண்டி எதையும் சொல்லித்தரதில்லைன்னு!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நம்புங்கள், இது அரசு ஆரம்பப் பள்ளி!

ஏர் எழுபது

Bird Photography