தென்மாநிலங்களிலேயே பொருளாதார வளர்ச்சியில் மிகவும் பின்தங்கிய மாநிலமாக தமிழகம்
தென்மாநிலங்களில் பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கியது தமிழகம் கடந்த 2008-09ம் ஆண்டு கணக்கீட்டின்படி, தென்மாநிலங்களிலேயே பொருளாதார வளர்ச்சியில் மிகவும் பின்தங்கிய மாநிலமாக தமிழகம் ஆகியுள்ளது. மேலும், தொழில் துறையில் ஒரே 1 சதவீதம் மட்டுமே வளர்ச்சியை எட்டியுள்ளது. இந்நிலையில், வரும் 7ம் தேதியன்று தமிழகத்துக்கான நிதி பங்கீட்டை பெறுவதற்கு, முதல்வர் கருணாநிதி டில்லி வரவுள்ளார். அனைத்து மாநிலங்களுக்கும் ஒவ்வொரு ஆண்டும் நிதி ஒதுக் கீட்டை மத்திய திட்டக்கமிஷன் வழங்கி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் வழங்கும் நிதியை மாநில அரசுகள் எவ்வாறு பயன்படுத்தியுள்ளன; எந்தெந்த துறைகளில் என்னென்ன மாதிரியான வளர்ச்சியை இந்த நிதியின் மூலம் எட்டியுள்ளன என்பது குறித்தெல்லாம் மத்திய திட்டக்கமிஷன் ஆராய்வது வழக்கம்.கடந்த 2009-10ம் ஆண்டில் தமிழகத்துக்கு 17 ஆயிரத்து 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப் பட்டது. இந்த நிதி முழுவதும் அதாவது 100 சதவீதம் வரை தமிழக அரசால் செலவிடப் பட்டுள்ளது. இதில், அதிக பட்சமாக மின்சாரத் துறைக்கு 2 ஆயிரத்து 751 கோடியும், போக்குவரத்துத...