Friday, March 5, 2010

ராமதுரைக்கு தேசிய அறிவியல் விருது

ராமதுரைக்கு தேசிய அறிவியல் விருது

ராஷ்ட்ரிய விஞ்ஞான் ஏவம் பிரதியோகிகி சஞ்சார் பரிஷத் (தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தகவல் தொடர்புக் கழகம்) என்ற மத்திய அரசின் அமைப்பு அறிவியல் வளர்ச்சிக்குப் பங்காற்றுபவர்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் விருது அளித்து கௌரவிக்கிறது. இந்த ஆண்டு, ”புத்தகம் மற்றும் இதழ்கள் மூலம் அறிவியல், தொழில்நுட்ப தகவல் தொடர்பில் தனித்துவ ஈடுபாட்டு முயற்சிக்கான தேசிய விருது” என்ற பிரிவின்கீழ் கிழக்கு பதிப்பக எழுத்தாளர் ராமதுரைக்கு விருது கிடைத்துள்ளது. ராமதுரையைப் போன்றே ராஜஸ்தானைச் சேர்ந்த டாக்டர் டி.டி.ஓஸா என்பவருக்கும் இந்த விருது தரப்பட்டுள்ளது. (மீதமுள்ள விருதுகள் விவரம் இங்கே.) கீழே உள்ள படத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் பிருத்விராஜ் சவான் விருதைத் தர ராமதுரை பெற்றுக்கொள்கிறார்.


கிழக்கு பதிப்பகம், பிராடிஜி புக்ஸ் என்ற இரண்டு பதிப்புகளிலும் ராமதுரை எழுதியுள்ள அறிவியல் புத்தகங்கள் காரணமாக அவருக்கு இந்த விருது (ரூபாய் ஒரு லட்சம்) கிடைத்திருப்பது பெருமை தரக்கூடிய ஒன்று.

ராமதுரை தினமணி பத்திரிகை ஆசிரியர் குழுவில் வேலை செய்தவர். ஐராவதம் மகாதேவன் தினமணி ஆசிரியராக இருந்தபோது அறிவியலுக்கு எனக் கொண்டுவரப்பட்ட வார இதழ் சப்ளிமெண்டின் பொறுப்பாசிரியராக இருந்தவர்.

இந்தச் சிறப்பான விருதைப் பெற்ற ராமதுரையை நாம் அனைவரும் பாராட்டி, வாழ்த்துவோம்.

No comments:

Post a Comment

Infolinks

ShareThis