நித்யானந்தாவும் மீடியாவும்

நித்யானந்தாவும் மீடியாவும்


நித்யானந்தா விஷயத்தை ஒவ்வொருவரும் எப்படி அணுகுகிறார்கள் என்பது சுவாரஸ்யமாக உள்ளது. முதலில் இதை வெளி படுத்திய சன் டிவி. இதனை பார்க்கும் audience -ல் சிறுவர்கள் இருப்பார்கள்; குடும்பத்தின் dining hall-ல் பார்க்க படும் என்பது பற்றி கவலை இன்றி திரும்ப திரும்ப ஒளி பரப்பியது. தின மலர் பத்திரிக்கை நித்யானந்தாவை விட ரஞ்சிதா மேலும், சினிமா உலகம் மீதும் தன் கோபத்தை தீர்த்து கொண்டது. இதற்கு முன் புவனேஸ்வரி விவகாரத்தில் சினிமா உலகம் தினமலரை எதிர்த்ததால் உள்ள கோபம்.!! இதை விட குமுதம் நிலை தான் செம சுவாரஸ்யம். இந்த விஷயம் வெளி வந்த பின், வந்த குமுதத்தில் கூட, நித்யானந்தா தொடர் உள்ளது (கடைசி நிமிடம் என்பதால் எடுக்க முடியலை போலும்) . ஆனால் விஷயம் வெளி வந்த உடனே " நித்யானந்தா லீலைகள் முழுதும் பார்க்க குமுதம் ஆன்லைனில் மெம்பர் ஆகுங்கள்" என தெரிந்த, தெரியாத அனைவருக்கும் மெயில் அனுப்பியது...!!

இந்த மனிதர் பிரம்மச்சரியத்தை பற்றியும் துறவி ஆவதையும் பற்றி பேசி எத்தனை ஆண்களும் , பெண்களும் துறவி ஆகியுள்ளனர்!! அவர்களை நினைத்தால் வருத்தமாக உள்ளது .


Comments

Popular posts from this blog

நம்புங்கள், இது அரசு ஆரம்பப் பள்ளி!

ஏர் எழுபது

Bird Photography