Friday, March 5, 2010

புலி வருது , கலைஞருக்கு ஆப்பு வைக்கும் பேரன்கள்

via எப்பூடி..... by எப்பூடி ... on 2/24/10
'புலி வருது புலி வருது'

படம் :என்வழி
ஒரு ஊரில ஒருத்தன் மாடுகளை காட்டுப்பகுதிக்கு உணவிற்காக அழைத்து செல்வது வழக்கம், ஒருநாள் மாடுகளை மேய விட்டுவிட்டு அமர்ந்திருந்தவனுக்கு பொழுது போகவில்லை, இதனால் புலி வருது புலி வருது என்று சத்தம் போட்டான். உடனே அருகில் விறகு வேட்டிக்கொண்டிருந்தவர்கள் ஓடிவந்தனை, அவர்களிடம் தான் விளையாட்டுக்கு கூரியாதகா கூறினான், அவர்களும் சலிப்புடன் திரும்பி சென்றனர். இப்படியே பல தடவை பலரை ஏமாற்றி அதிலே அற்ப மகிழ்ச்சி கொண்டிருந்தான். ஒருநாள் உண்மையிலேயே புலி வந்தது அவன் எவ்வளவு கத்தியும் யாரும் வரவில்லை , கடைசியில் மாடுகளை புலி அடித்து கொண்டுவிட்டது.

இது எல்லோருக்கும் தெரிந்த கதைதான், இதே கதை ஜாக்குவார் தங்கம் வீட்டிலும் நடந்தாலும் ஆச்சரியமில்லை. நேற்றுவரை கார் கண்ணாடியை அஜித் ரசிகர்கள் உடைத்துவிட்டார்கள், வீட்டையும் மனைவியையும் ரஜினி ரசிகர்கள் தாக்கிவிட்டார்கள் என புகார் கொடுத்தவர் இன்று தனது மகனை அஜித் ரசிகர் ஒருவர் கடத்த போவதாக கூறியுள்ளார். இவருக்கு வந்த மிரட்டல் கடிதத்தில் அனுப்பியவன் தனது விலாசத்தை இணைத்து அனுப்பியதுதான் உச்சக்கட்ட காமடி. இப்படியே தினம் தினம் ஒரு புளுகு மூட்டையை அவிழ்க்கும் தங்கத்தின் வீட்டிற்குள் உண்மையிலேயே 'புலி வருது புலி வருது' கதை போல நடந்தால் அப்போதும் ஜாக்குவார் இப்போதுபாடும் இதே பல்லவியை பாடினால் யாராவது நம்புவாகளா? அட கலைஞர்தான் நம்புவாரா? இப்படியே போனால் ஒருநாள் புலி வந்தாலும் ஆச்சரியமில்லை.

கலைஞருக்கு ஆப்பு வைக்கும் பேரன்கள்


கலைஞரை தன்னை பாராட்டியும் தான்பார்த்த நடிகைகளின் அரைகுறை நடனத்தையும் இவ்வையகம் பார்க்க வேண்டும் என்பதற்காக தனது பெயரிலான ஊரான் வீட்டு காசில் உருவாக்கிய கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பபோவது எல்லோருக்கும் தெரியும். இதில் அஜித்தின் பேச்சும் ரஜினியின் கைதட்டும் வருமா என்பதே இன்றைய மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளநிலையில் இந்த நிகழ்ச்சியை காண மக்களும் ஆவலாக உள்ளனர். சனிக்கிழமை மாலை இந்த ஒளிபரப்பு இடம்பெறவிருக்கிறது

இந்த ஒளிபரப்பை பார்ப்பவகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கு அதிகம் கங்கணம் கட்டிக்கொண்டிருப்பது வேறு யாருமல்ல, கலைஞருடன் பிரிவு கண்டு பின்னர் இப்போது தாமரை இல்லை நீர்போல உறவாடும் அவரது பேரன்கள்தான். இவர்களது சன்டிவியில் வழமைக்கு மாறாக எந்தவொரு விசேட நாளாக இல்லாதபோதும் எதிர்வரும் 27 அதாவது கலைஞரின் பாராட்டுவிழா இடம்பெறும்போது 'மெகாஹிட்' படம் என்று விளம்பரப்படுத்தி ரஜினியின் 'சந்திரமுகியை' மீண்டும் ஒளிபரப்ப போகிறார்கள். மறுநாள் விஜயின் 'கில்லியும்' ஒளிபரப்பாகிறது. இதன்மூலம் கலைஞரின் நிகழ்ச்சியை தவிர்த்து பார்வையாளர்களை சன்னின் பக்கம் திருப்பவே இந்த ராஜதந்திரம், இவை தாத்தாவிடம் குடித்த யானைப்பால்தானே (யானை அல்ல ஞான ).அதுதவிர உதயநிதி ஸ்டாலின் வெளியிடும் புதிய திரைப்படமான 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தின் ஆரம்ப காட்சிகளுக்கு மக்களை செல்லவிடாமல் தடுக்கவும் இந்த திடீர் மெகாஹிட் திரைப்பட ஒளிபரப்பு இடம்பெறுவதாகவும் கருதலாம். அப்படியென்றால் ஒரு கல்லில் இரண்டு மாங்காய்.

மாறன்களா! பார்த்து நாளை உங்கள் மேலயும் ஜாக்குவார் , குகநாதன், பன்னீர்செல்வம் என்போர் புகார் கொடுத்தாலும் ஆச்சரியம் இல்லை.

No comments:

Post a Comment

Infolinks

ShareThis