திருமண அழைப்பிதழ்


சோறும் சரக்கும் இலவசம்…


ஹலோ கார்க்கிதானே இது?
அது இது என்ற ஏகவசனம் வேண்டாம் தோழரே..நீங்கள் யார்?
உனக்கு ஏகன் வசனம் தாண்டா பிடிக்காது. ஏகவசனம் பழகின ஒன்னுதானே?
நீங்க பிளாகரா?
என்னடா உளர்ற? நான் சுதாகர்டா. CPT சுதாகர்.
டேய் மாம்ஸ்…
அதுக்கு மேல நாங்க பேசியதை எழுதினால் என் பிளாகை சன் டிவி ரேஞ்சுக்கும், என்னை நித்யானாந்தா ரேஞ்சுக்கும் நீங்கள் நினைத்து விடக் கூடுமென்பதால் இதோடு அதை விட்டுவிடுவோம். அவன் அழைத்த விஷயம் என்னவென்றால், அவனுக்கு கல்யாணமாம். அதுக்கு திருமண அழைப்பிதழ் போட வேண்டுமாம். நண்பர்களுக்கு மட்டும் அச்சடிக்கப் போகும் பத்திரிக்கையில் ஏதாவது வித்தியாசமாக செய்ய உத்தேசமாம். உடம்பு சரியில்லன்னா டாக்டர் கிட்ட போலாமாம். பசிக்குதுன்னா ஹோட்டலுக்கு போலாமாம். வித்தியாசமன்னா கார்க்கியிடம்தான் போகனுமாம். எத்தன “மாம்”? ஸப்பா..இதனால்தான் அவனை நாங்க மாம்ஸ்ன்னு கூப்பிடுவோம்.ப்ளூரல்ன்னா(Plural) ”ஸ்” தானே சேர்க்கனும்?
சரி. நம்பி வந்துட்டான். என்ன மாம்ஸ் செய்யனும் என்றேன்.
மச்சி. நம்ம பசங்க, அப்புறம் ஏரியா பசங்களுக்கு மட்டும்  தான் இந்த இன்விடேஷன கொடுக்கப் போறேன். அதனால் அடிச்சு ஆடு. ஆனா பசங்க அப்படியே ஷாக் ஆகனும்.
அடிச்சா ஆடித்தாண்டா ஆகனும். சரிடா. அரை மணி நேரம் கழிச்சு கூப்பிடு
டொக்.
கபாலத்தில் கடம் வாசிக்க, அலுவலகத்தில் அங்குமிங்கும் நடந்து யோசித்து இந்த பத்திரிக்கையை தயார் செய்தேன்.

சோறு போடறோம். வந்துடு மச்சி

எங்க :    சென்னை மயிலாப்பூரில் இருக்கும் AVM  ராஜேஷ்வரி மண்டபத்தில்

எப்ப : 25, ஏப்ரல் 2010, காலை 7.30 –9

என்ன : பூரி, இட்லி, வடை, பொங்கல், etc

ஏன் :           நானும், ரேவதி என்ற பொண்ணும் கண்ணாலம் கட்டிக்க போறோம். அதுக்காகத்தான். 
மெயில் பார்த்துட்டு அழைத்தான். வாய்ப்பே இல்லையென்று 4 முறையும், சான்ஸே இல்லையென்று 5 முறையும், அருமையென்று 6 முறையும் சொன்னான். அந்த சரக்கு மேட்டர் மாம்ஸ் என்றதற்கு அது உண்டு மச்சி என்றான். லூசுப்பையன். கார்டின் பின்புறம் அடிக்க வேண்டிய மேட்டரை படிக்கவில்லை போலும். நீங்களும் பார்த்திடுங்க.
கார்டுக்கு பின்னாடி போட்டிருக்கிற மாதிரி, கல்யாணத்துக்கு முன்னாடி நாள் நைட்டு, மண்டபத்துக்கு பின்னாடி இருக்கிற ரூமில் பேச்சுலர் பார்ட்டி உண்டு. வெறும் டம்ளரோடும், டவுசரோடும் ஆஜராகும்படி கேட்டுக் கொள்கிறேன்.
இந்த அழைப்பிதழ் அவன் மாமனார் கண்ணிலோ, அவனுக்கு வாழ்வுத் தரப்போகும் பெண்ணின் கண்ணிலோ படாமல் இருக்க எல்லாம் வல்ல மகரநெடுங்குழைகாதனை வணங்குவோம்.


Thanks to கார்க்கி

Comments

  1. best ever,, laughed laughed very good one

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நம்புங்கள், இது அரசு ஆரம்பப் பள்ளி!

ஏர் எழுபது

Bird Photography